பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மரீன் லு பென்

0
593

ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

EU பணமோசடி அலுவலகம் (l’Office de lutte antifraude de l’Union européenne) ஏப்ரல் 16 அன்று குற்றப்பத்திரிகையை வெளியிட்டது.

மரீன் லு பென் 2004 மற்றும் 2007 க்கு இடையில் € 137,000 பொது பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மரீன் லு பென் சில காலம் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

இவருடன் மேலும் மூன்று ஐரோப்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதற்காக 116 பக்க ஆவணம் தயாரிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு முன்னர், பணமோசடி குற்றச்சாட்டுகள் மரைன் லு பென்னுக்கு பெரும் பின்னடைவாக அமையும்.