ஐபிஎல் போட்டியில் மீண்டும் ஒருமுறை ரன் எடுக்க முடியாமல் அவுட்டாகி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் விஜய் சங்கர்.
தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவர் அவுட்டாகி வருவது ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்துள்ளது.
அந்த வகையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தீக்ஷனா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.2 பந்துகளை சந்தித்த விஜய் சங்கர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
அவர் கேட்ச்சை பிடித்ததும் விக்கெட் கீப்பர் தோனி பந்தை மேலே தூக்கி போட்டு கத்தியப்படி விக்கெட்டை வித்தியாசமாக கொண்டாடினார். அதே போல தோனி கேட்ச் பிடித்ததும் ரசிகர்களும் அதை ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.