பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்! தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு

0
554

 டொலருக்கு எதிரான ரூபாயின் ஸ்திரத்தன்மையை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக மாற்றியமைக்கவேண்டும் என்று இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வருடாந்த பேரூந்துக்; கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை மாதம் அமுலுக்கு வருவதாக குறிப்பிட்டார்;

இதன்போது புதிய கட்டண அதிகரிப்பு, டொலர் வீதம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கருத்திற்கொள்ள மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்துள்ளதால், பேருந்து சேவை தொடர்பான அனைத்து பொருட்களான டயர்கள், டியூப்கள், உராய்வு எண்ணெய்கள்;, பழுதுபார்ப்பு, உதிரி பாகங்கள் மற்றும் பேருந்துகளை இயக்க தேவையான அனைத்து உபகரணங்களின் விலையும் உயர்ந்துள்ளன.

கடந்த இரண்டு மாதங்களில், டயர்களின் விலை 40 வீதமாக உயர்ந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

எனவே, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து வருடாந்த பேரூந்து கட்டண திருத்தத்தின்போது சிறந்த கட்டணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்