ராட்சத ராஜ நாகத்திற்கு முத்தம் கொடுத்த நபர்! அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி

0
44

ராட்சத கோப்ரா பாம்பிற்கு முத்தம் கொடுத்த நபருக்கு நொடிப்பொழுதில் பாம்பு கொடுத்த ஷாக் இணையத்தில் காணொளியாகி வெளிவந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இன்று ராட்சத பாம்புகளை பிடித்து பலரும் தங்களது சாதனையை வெளிக்காட்டி வருகின்றனர். பாம்புகளில் அதிகமான விஷம் கொண்டு காணப்படுவது தான் நாகப்பாம்பு.

சமீபத்தில் பாம்பு பிடித்த கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பாம்பு கடித்ததால், சாவின் விளிம்பு வரை சென்றுவந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் மீண்டும் பாம்பு பிடிப்பதற்கு கிளம்பியுள்ளார். 

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஊர்வன விலங்குகள் ஆர்வலரான பிரையன் பார்சிக் கோப்ரா தலையில் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பாம்பு முத்தமிட்ட மறுகணமே ஆக்ரோஷத்துடன் எதிர்வினை கொடுத்தது பீதியடையச் செய்த காட்சி வைரலாகி வருகின்றது.