ஒரே சீட்டுக் கட்டை கலைப்பதில் எவ்வித பயனுமில்லை : தயாசிறி ஜயசேகர

0
42

அமைச்சரவையை மாற்றுவதில் எவ்வித பயனுமில்லை எனவும் மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாக அதன் உள்ளடக்கம் பற்றி அனைத்து கட்சிகளுடனும் பேசப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.