வலியால் மயங்கிய மருமகன்! விடாமல் மாமியார் செயல்: அதிர்ந்து நின்ற மகள்

0
43

தினமும் குடித்து விட்டு வந்து தொந்தரவு செய்த மருமகனை மாமியார் தடியால் அடித்து உதைத்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குடிக்கு அடிமையாகிய மருமகன்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் கேசவ் (44). இவரது மனைவி சகுந்தலா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சகுந்தலாவின் தாயாரும் அவர்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மாமியார் இருவரையும் தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்துள்ளார். 

அதேபோல், குழந்தைகள் என்று பாராமல் அடித்து துன்புறுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுமை இழந்த மாமியார் ஏன் இப்படி தினமும் குடித்து விட்டு எங்களை டார்ச்சர் செய்கிறார் என்று ஆவேசமாக கேட்டுள்ளார். அதற்கு கேசவ் தனது மாமியாரை அவதூறாக பேசியுள்ளார்.

வலியால் மயங்கிய மருமகன்

இதனால், ஆத்திரமடைந்த மாமியார் கேசவை தடியால் அடித்து உதைத்துள்ளார். அப்பொழுது தன்னை விட்டுவிடுமாறு மருமகன் கெஞ்ச மாமியார் விடாமல் தாக்கியுள்ளார். இதனால், மருமகன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்து மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரது மாமியாரை கைது செய்துள்ளனர்.