எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ள கொழும்பு பங்குச்சந்தை!

0
30

கொழும்பு பங்குச் சந்தையின் செயற்பாடுகள் நாளை முதல் ஒரு வாரத்துக்கு (22ஆம் திகதி வரை) மூடப்படுகின்ற அறிவிப்பு, அந்த பங்குச்சந்தை தற்காலிகமாக திவாலாகிவிட்டதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புக்கு சமனானதாகும் என்று விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது

தாம்,வெளிநாட்டுக் கடன் பொறுப்புகளை தற்காலிகத் திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று இலங்கை கடந்த வாரம் அறிவித்ததன் காரணமாக சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை தொடர்பான நம்பிக்கையில் பாரிய அடி வீழ்ந்ததாக பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் கொழும்பு பங்கு சந்தை ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றமையானது, சர்வதே பார்வையில் நாட்டின் நம்பிக்கைக்கு மற்றொரு பெரிய அடியாகும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன கூறியுள்ளார்

இதன் பொருள் வணிகத்திலும் இலங்கை நெருக்கடி உள்ளதை குறிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

முதலீட்டாளர்கள் மற்றும் பிற சந்தைப் பங்கேற்பாளர்களின் கருத்துப்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

எனினும் சில பங்குதாரர்கள்; இந்த கருத்தை மறுத்தனர்,

மூலதன சந்தை பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்காமல் முடக்கல்; முடிவு எடுக்கப்பட்டதாகக் அவர்கள் கூறியுள்ளனர்.

இது நாட்டின் அரசியல் சூழ்நிலை நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் செயலாகவே இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .