வடமராட்ச்சியில் மாணவி திடீர் மரணம் – மருத்துவ பரிசோதனையில் கர்ப்பம்

0
44

யாழ்ப்பாணம் வடமராட்ச்சியில் திடீர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்த மாணவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பம் தரித்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

திடீர் உடல்நல பாதிப்பு அடைந்த நிலையில் 18 வயதுடைய குறித்த மாணவி நேற்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவருடைய உடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இன்று மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது இதனை அடுத்து போலீசார் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.