முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் தஞ்சாவூரில் கரையொதுங்கினர்!

0
42

முல்லைத்தீவிலிருந்து 13ம் திகதி மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் இன்று காலை 12 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் கீழ தோட்டம் மீனவர் கிராமம் பகுதியில் கரை ஒதுங்கினர்.

இலங்கையிலிருந்து 13 /4 /22 ஆம் திகதி மீன்பிடிக்க வந்த 2 இலங்கை மீனவர்கள் வந்த நாட்டு படகில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் இரண்டு நாளாக கடலுக்குள் இருந்து இன்று கீழத்தோட்டம் பகுதியில் உள்ள கடற்கரையில் ஒதுங்கி உள்ளனர்.

இது தொடர்பில் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழு காவல் அலுவலர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மீனவர்களது விபரம் வருமாறு;

1) நடராஜன் சுதாகர் உதயபுரம் பேசாலை மன்னார்

2)ரோசாண் முல்லைத்தீவு