நாளுக்கு நாள் உயர்வடைகிறது டொலரின் பெறுமதி!

0
459

இலங்கையில் பல முன்னணி உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335 ரூபவாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் நேற்று டொலரின் விற்பனை விலை 330 ரூபாவாக இருந்தது.

இந்நிலையில், இன்று டொலரின் பெறுமதி 5 ரூபாவால் உயர்வடைந்த்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியும் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் இன்றைய அறிக்கையின்படி, அமெரிக்க டாலரின் விற்பனை விலை 327 ரூபாவிலிருந்து 329 ரூபாவிற்கு உயர்வடைந்த்துள்ளது.

அவ்வாறே, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் விலை 416 ரூபா 29 சதம். விற்பனை விலை 431 ரூபா 27 சதமாகவும்,

யூரோ ஒன்றின் கொள்முதல் விலை 350 ரூபா 05 சதம் விற்பனை விலை 361 ரூபா 83 சதமாகவும்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் விலை 343 ரூபா 01 சதம். விற்பனை விலை 356 ரூபா 88 சதமாகவும்,

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 252 ரூபா 17 சதம் விற்பனை விலை 262 ரூபா 77 சதமாகவும்,

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 235 ரூபா 97 சதம். விற்பனை விலை 246 ரூபா 86 சதமாகவும்,

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் விலை 2 ரூபா 54 சதம் விற்பனை விலை 2 ரூபா 65 சதமாகவும் பதிவாகியுள்ளது.