ஹசரங்கா வீசிய பந்தில் சிதறிய ஸ்டெம்ப்! கொல்கத்தாவை பெங்களூர் அணி வீழ்ந்தது

0
436

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவை பெங்களூர் அணி வீழ்த்திய நிலையில் ஹசரங்கா அபாரமாக எடுத்த விக்கெட்டின் வீடியோ வெளியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி த்ரில் வெற்றியை பெற்றது.

இப்போட்டியில் பெங்களூர் அணி வெற்றிக்கு முக்கிய காரணம் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா தான்.

ஏலத்தில் ரூ 10.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஹசரங்கா தனது பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.

4 ஓவர்கள் வீசிய ஹசரங்கா 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதிலும் கொல்கத்தா வீரர் ஷெல்டன் ஜேக்சனுக்கு கூக்ளி பந்தை வீசினார் ஹசரங்கா. இதில் திணறிய ஷெல்டன் கிளீன் போல்ட் ஆனார். அதிலும் பந்தானது ஸ்டெம்பையே கீழே சாய்த்தது.