டெல்லி எல்லைகளில் இணையதள சேவை முடக்கம் நீட்டிப்பு

0
98

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினமான கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது, பயங்கர வன்முறை உண்டானது.

நிலவிய பதற்றமான சூழல் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையாக தற்காலிகமாக டெல்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

பின்னர் 29ஆம் தேதி இரவு 11 மணி முதல் 31ஆம் தேதி இரவு 11 மணி வரை பொது அவசர நிலையை அறிவிக்கப்பட்டது. பொது பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் விவசாயிகள் போராடும் டெல்லியின் எல்லை பகுதிகளில் இணையதள சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியது.

இணையதள சேவை முடக்கம் டெல்லியின் சிங்கு, காஷிபூர், திக்ரி எல்லைகளில் இன்று (2.2.2021) இரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.