சம்மர்ஹில் துப்பாக்கிச் சூடு – பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்

0
166

கனடாவின் சம்மர்ஹில் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சம்மர்ஹில் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் மாதர்ஸ்பீல்ட் டிரைவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய வெளிர் வண்ணம் (சாம்பல் அல்லது வெள்ளி), இருண்ட நிற சாளரங்கள் கொண்ட நான்கு கதவுகள் கொண்ட செடான் அதிக வேகத்தில் அப்பகுதியை விட்டு வெளியேறியது என்று சாட்சிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை நாடுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ரொறொன்ரோச் சேர்ந்த 23 வயதான சிராக் டெஸ்ஃபே என்பவர் உயிழந்தார். மற்றொரு 27 வயதான பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.