பயனர்களை கவர புது அம்சங்களை வழங்கும் சிக்னல்

0
486

சிக்னல் நிறுவனம் தனது குறுந்தகவல் செயலியில் தொடர்ந்து புது அம்சங்களை வழங்கி வருகிறது.

புதிய அம்சங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிக்னல் செயலியில் புதிதாக சாட் வால்பேப்பர், அனிமேடெட் ஸ்டிக்கர், ப்ரோபைல் பகுதியில் அபவுட் எனும் உட்பிரிவு உள்ளிட்டவை இணைக்கப்பட்டு இருக்கின்றன.

அதில் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் 24 அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதனை தொடர்ந்து ஐபோன் பயனர்களுக்கு அழைப்பின் போது குறைந்த டேட்டா பயன்படுத்த கோரும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த அப்டேட் இதுவரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.