வழிபாட்டுத் தலங்கள் கோட்டைகளாக மாறிவிடக்கூடாது; மாறாக அவை திறந்த இடங்களாகவும் பிறரை வரவேற்கக்கூடியவையாகவும் இருக்கவேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்திருக்கிறார்.
இயூசோஃப் இஷாக் பள்ளிவாசலில் கிறிஸ்துவ தலைவர்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வழிபாட்டு இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமான என்ற கேள்விக்குப் பதிலளித்தார்
“நீங்கள் ஆன்மிகச் சிந்தனைகளுடன் வழிபாட்டு இடங்களுக்குச் செல்கிறீர்கள். வழிபாட்டுத் தலங்களை கோட்டைகளாக நாம் மாற்ற ஆரம்பித்தால் அது எப்படி பிறரை வரவேற்கும். அத்துடன் இதனால் நல்ல பயன் ஏற்படுமா? எனவே இதற்குச் சமச்சீரான அணுகுமுறை தேவை,” என்று அவர் கூறினார்.
இருந்தபோதும் வழிபாட்டு இடங்களை நிர்வாகிப்போரும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
‘புரோடெஸ்டன்’ கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்த 16 வயது சிங்கப்பூர் இந்தியர், இரண்டு பள்ளிவாசல்களைத் தாக்கத்
தீட்டியுள்ள திட்டங்கள் அம்பலமானதை அடுத்து இயூசோஃப் இஷாக் பள்ளிவாசலில் சமயத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. இந்தச் சதித்திட்டத்தை வன்மையாகக் கண்டித்த இரு தலைவர்களும் பரஸ்பர நம்பிக்கையையும் புரி
ந்துணர்வையும் மறு உறுதி செய்துகொண்டனர்.