கதாநாயகியாக அறிமுகமாகும் வனிதா!

0
521

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம். படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.