ஆகக் குறைவான ஊழல் உள்ள நாடுகளின் பட்டியல் -மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர்

0
502

ஆகக் குறைவான ஊழல் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய ஊழல் எதிர்ப்பு இயக்கமான டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட 2020 ஊழல் கண்ணோட்ட குறியீட்டில் பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் 85 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் 180 நாடுகள் ஊழலின் தொடர்பில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. டென்மார்க்கும் நியூசிலாந்தும் 88 புள்ளிகளைப் பெற்று இதில் ஆக உயரிய இடத்தை வகித்துள்ளன.

இந்தப் பட்டியலில் சிறந்த பத்து இடங்களில் இடம்பெற்ற ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் உள்ளது.

கொவிட்-19 கிருமித்தொ

ற்று நிலவிய சூழலில் ஊழலைச் சமாளிக்க பல்வேறு உலக நாடுகள் திணறியதாக டிஐ தலைவர் டிலியாக ஃபெரேரியா ரூபியோ தெரிவித்தார்.

இப்பட்டியலின் உயரிய நிலையில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது சுகாதாரக் கட்டமைப்பில் கூடுதலாக முதலீடு செய்து வருவதாக டிஐ அமைப்பு தெரிவித்தது.