மாஸ்டர் விஜய் சேதுபதியின் படமா? என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி அளித்த அதிரடி பதில் இதோ!

0
335

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

கடந்த 13 ஆம் தேதி அன்று வெளியான மாஸ்டர் ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரிய வசூல் சாதனை படைத்தது வருகிறது. மேலும் இப்படம் 200 கோடி வசூலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, அவரிடம் மாஸ்டர் படம் குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

மேலும் அப்போது மாஸ்டர் படம் விஜய் சேதுபதியின் படம் தானா? என்று கேள்விக்கு “இந்த கேள்வி அவசியமே இல்லாத கேள்வி, வேறு கேள்வி கேளுங்கள்.

இந்த திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்துள்ளது என்றால் அதற்கு காரணமே விஜய் சார் தான்” என கூறியுள்ளார்.