இந்து கடவுளை அவமதித்ததாக நடிகர் சயீப் அலிகான் உள்பட 5 பேர் மீது வழக்கு

0
586

சயீப் அலிகான் இந்தியில் பிரபல நடிகர் . இவர் “தாண்டவ்” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். பர்கான் அக்தர் தயாரித்துள்ளார்.

தாண்டவ் வெப் தொடரில் இந்து மத கடவுளை அவமதித்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாட்டில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடிகர் சயீப் அலி கான், இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாண்டவ் வெப் தொடரில் இந்து கடவுளை அவமதித்து இருப்பதாகவும், இதுதொடர்பாக தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் சயீப் அலிகான் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் கோரி சமூக ஆர்வலர் ஆரத்யா என்பவர் பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் நடிகர் சயீப் அலிகான், தயாரிப்பாளர் பர்கான் அக்தர், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், முகமது ஆயுப், அபர்ணா புரோகித் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கே.ஆர்.புரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.