இந்தியாவின் சிறந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் – கருத்துக்கணிப்பு

0
371

இந்தியா டுடே குரூப்-கார்வி இன்சைட்ஸ் மூட் ஆஃப் தி நேஷன் ஜனவரி 2021 வாக்கெடுப்பில் மொத்த வாக்குகளில் 25 சதவீதத்தைப் பெற்று மிகச் சிறந்த முதலமைச்சர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் யோகி ஆதித்யநாத். அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது.

தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியாவில் சிறந்த செயல்திறன் மிக்க முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இளம் வயது முதல்வர்களில் ஒருவரான யோகி ஆதித்யநாத், ஹத்ராஸ் கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை கையாண்டது மற்றும் சமீபத்திய லவ் ஜிகாத் சட்டத்தை அமல்படுத்தியது போன்ற விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்.

மொத்த வாக்குகளில் 14 சதவீத வாக்குகளைப் பெற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி ஜெகன் மோகன் ரெட்டியை முந்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.