ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து விலகினார் போர்ச்சுகல் வீரர்

0
493

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. இதனால் அங்குப் பாதுகாப்பு கருதி ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பிப்ரவரி 8 ஆம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் துவங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து தனி விமானம் மூலம் மெல்போர்னுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அழைத்துவரப்பட்ட வீரர்களின் மூன்று விமானத்தில் பயணித்து சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போது அந்த விமானங்களில் பயணித்த சுமார் 72 வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருப்பது அவசியம் என்றும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகள் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தான் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போர்சுகல் வீரரான ஜோவா சாவ்ஸா தெரிவித்துள்ளார்.

ஜோவா சாவ்ஸா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராமில் ,“நான் ஆஸ்திரேலியா கிளம்புவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்று எனக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அடுத்த சில வாரங்களுக்கு என்னால் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க முடியாது. ஆனால் தற்போது எனக்கு கொரோனா தொற்று சோதனையின் முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. அதே நேரம் எனக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. இருந்தாலும் ஆஸ்திரேலிய அரசின் கடுமையான விதிமுறைகள் காரணமாக என்னால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடின உழைப்பிற்குப் பின் இது போன்ற மிகப்பெரிய தொடரில் பங்கேற்க முடியாமல் போனது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.