இந்தியாவில் 145 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று

0
379

இங்கிலாந்தில் உருவாகி பரவி வருகிற உருமாறிய கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பரவி உள்ளது.

இந்தியாவிலும் இந்த புதிய உருமாறிய கொரோனா இதுவரை 145 பேரை தாக்கி உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநில அரசு மருத்துவமனைகளில் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களோடு பயணித்தவர்கள், குடும்ப தொடர்புகள், பிறருடனான தொடர்புகள் என விரிவான தொடர்பு தடமறிதல் தொடங்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் அனைவரையும் மிகவும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் இந்த கொரோனா வைரஸ்க்கு எப்போது தான் அழிவு வருமோ?