ஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு!

0
592
Green Emerald Stone Discovery largest Emerald Zambia mine

ஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ எடை கொண்டதாக காணப்படுகிறது. Green Emerald Stone Discovery largest Emerald Zambia mine

கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மரகதக் கல்லை சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்வின் போது ஏலத்தில் விட சுரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குறித்த கல் 44.84 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மரகதக்கல் பட்டை தீட்டப்பட்டால் 5 ஆயிரத்து 655 காரட் எடை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மரகதக் கல் 10 ஆம் நூற்றாண்டின் டேனிஷ் மன்னனின் பொக்கிஷம் என கருதப்படுகின்றது. இதனுடைய மரபுவழி ‘இன்கலாலம்’ என்று அழைக்கப்படுகின்றது, இது அந்நாட்டு ஜாம்பியா பெம்பா மொழியில் ‘சிங்கம்’ என்று பொருள்படும்.

மேலும் இந்த பச்சை நிற மரகதக் கல் ‘குறிப்பிடத்தக்க தெளிவு மற்றும் ஒரு முழுமையான சமச்சீர் தங்க பச்சை நிறத்தை கொண்டுள்ளது,’ என்றும் புவியியல் வல்லுநரான டெபப்ரிய ரக்ஷித் மற்றும் மரகத சுரங்கத் தயாரிப்பாளர் ரிச்சர்டு கபீடா ஆகியோரால் இந்த கல் கண்டுபிக்கப்பட்டுள்ளது.

ஜாம்பியாவின் மரகதங்களில் குறிப்பாக ஐரோப்பாவில் விற்பனையாளர்களிடையே இந்த பச்சை நிற மரகத கல் அதிக ஆர்வம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- Green Emerald Stone Discovery largest Emerald Zambia mine

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்