ஜம்மு – காஷ்மீரில் பயங்கர துப்பாக்கிச் சண்டை

0
215
JK 2 Encounters underway security forces terrorist Tamil News

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்று வருவதாக அந்தநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. (JK 2 Encounters underway security forces terrorist Tamil News)

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திலுள்ள கேரி பகுதியில் ஆயுததாரிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் நிகழ்விடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அங்கு பதுங்கியிருந்த ஆயுததாரிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி, துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதுடன், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக நேற்று, நவ்காம் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; JK 2 Encounters underway security forces terrorist Tamil News