ரணில் -மோடி உயர் மட்ட பேச்சுவார்த்தை!

0
119

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று புது டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. Narendra Modi – Ranil Meeting Sri Lanka Tamil News Today

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் (20) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் தனது விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளார். பிரதமருடன் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, அர்ஜூன ரணதுங்க, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் செல்கின்றனர்.

ஜனாதிபதியை இந்திய உளவுப் பிரிவான “ரோ” அமைப்பு கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சர்ச்சைச் செய்தி குறித்தும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அரசியல் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!

அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

Tamil News Live

Tamil News Group websites