இராமநாதபுரத்தில் விபத்து ; 03 இளைஞர்கள் பலி – ஐவர் காயம்

0
614
Sayalkudi near car accident 3 youths dies

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 03 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். (Sayalkudi near car accident 3 youths dies)

அரசு பேரூந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 05 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் இராமநாதபுரம் கீழக்கரை அருகேயுள்ள மாயகுளம் பாரதி நகரைச் சேர்ந்த 22 வயதுடைய முருகேசன் அருள், 18 வயதுடையவர்களான உமயசிங்கம் உமயபாலா, லிங்கம் விஜயராஜ்,

23 வயதுடைய ரவி கிருஷ்ணகுமார், 18 வயதுடைய ராமச்சந்திரன் நவீன், 20 வயதுடைய சக்திவேல் உபயகணேஷ், 16 வயதுடைய முருகேசன் புவனேசுவரன், 16 வயதுடைய ஆகிய 7 பேரும் பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு காரில் பயணித்துள்ளனர்.

சிவகாசியில் பட்டாசுகளை வாங்கிவிட்டு இன்று அதிகாலை ஊருக்குப் புறப்பட்ட போது, இராமநாதபுரம் சாயல்குடி அருகேயுள்ள கீழச்செல்வனூர் பொலிஸ் நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தது.

இதன்போது, இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரச பேரூந்து ஒன்று எதிர்பாராத விதமாக காருடன் நேருக்குநேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்ததுடன், குறித்த காரில் பயணித்த அருள், உமயபாலா, விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் கீழச்செல்வனூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் பேரூந்து சாரதியான இதம்பாடல் கிருஷ்ணனும் காயமடைந்துள்ளார். இந்த விபத்து குறித்து கீழச்செல்வனூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Sayalkudi near car accident 3 youths dies