கனடாவிலும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கஞ்சா விற்பனை

0
320
Canada legalized canja sales

உருகுவேயைத் தொடர்ந்து கனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து கடைகளில் கஞ்சா விற்பனைக்கு வந்தது. Canada legalized canja sales

போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அரசின் அங்கீகாரம் பெற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து பொதுமக்கள் கஞ்சா எண்ணெய், விதை, தாவரம் மற்றும் உலர்ந்த கஞ்சா ஆகியவற்றை
வாங்கிக்கொள்ளலாம். 30g உலர்ந்து கஞ்சா வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்கள் மற்றும் மாநிலங்கள் அவர்களது அதிகார வரம்பிற்குள் கஞ்சா வாங்கப்படும் இடங்கள் குறித்த தெளிவான புள்ளி விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை கறுப்புச் சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்டுவந்த போதைப் பொருட்களை அரசாங்கத்தின் கண்காணிப்புக்குள் அதன் அனுமதியுடன் விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக இருப்பதினால், இதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகயிருக்கும் என நிர்வாகப் பிரிவினர் எதிர்பார்க்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு போதைப் பொருட்தடை உத்தரவிற்குப் பின்னர், கனடா அரசாங்கமே நாடு முழுவதும் 109 அனுமதிக்கப்பட்ட கஞ்சா விற்பனை நிலையங்களை நிறுவ அனுமதி வழங்கியுள்ளது.

நியூபவுண்ட்லேண்ட், லேப்ராடார் ஆகிய மாகாணங்களில் அதிகாரப்பூர்வமாக கஞ்சா விற்பனை தொடங்கியுள்ளது.

tags :- Canada legalized canja sales

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்