ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது! – விசாரணை ஆணையம்!

0
101
Jayalalithaa's death Inquiry right track - Investigation Commission

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளது.Jayalalithaa’s death Inquiry right track – Investigation Commission

இதுதொடர்பாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ஆணையமே தானாக முன்வந்து போயஸ் கார்டன் தொடங்கி, அப்போலோ மருத்துவமனை வரை விசாரணைக்கு தொடர்புடையவர்கள் என கருதிய 110 பேரிடம் ஆணையம் விசாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலம் அடிப்படையில், இன்னும் தொடர்புடையவர்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால், குறைந்தது 4 மாத கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எவ்வித காலதாமதமும் செய்யவேண்டிய அவசியம் ஆணையத்திற்கு இல்லை எனவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :