மறைமுகமாக தோனிக்கு ஆலோசனை வழங்கிய கம்பீர்

0
529
gautam gambhir say future ms dhoni

மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர். விக்கெட் கீப்பருடன் தலைசிறந்த ஃபினிஷராகவும் திகழ்ந்தார். வயதாக வயதாக எம்எஸ் டோனியின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவரது தொய்வாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை மிடில் ஆர்டர்கள் சரியாக அமையாததாலும் இந்தியா முக்கியமான ஆட்டங்களில் திணறி வருகிறது. gautam gambhir say future ms dhoni,tamil sports news,cricket news in tamil,india sports news

தோனியின் ஆட்டம் எப்படி இருந்தாலும் 2019 உலகக்கோப்பை வரை தோனி விளையாடுவார் என்று தேர்வுக்குழு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் தோனிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால், தோனிதான் விக்கெட் கீப்பர், ரிஷப் பந்த் முதன்மை பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அணியில் இடம்பெற வேண்டுமென்றால் சிறப்பான ஆட்டம்தான் முதல் அளவுகோல் என்று தோனியின் ஆட்டம் குறித்து கவுதம் காம்பிர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘சிறப்பான ஆட்டம் (Performance) என்ற ஒரே அளவுகோலால் மட்டுமே அணியில் ஒரு பகுதியாக அங்கம் வகிக்க முடியும். நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால், இந்திய அணியில் ஒரு அங்கமாக பங்கேற்க இயலாது.

வயது ஒரு பிரச்சனை அல்லை. தோனி சிறப்பாக விளையாடி, விமர்சனங்கள் தவறானவை என்பதை நிரூபிக்க விரும்புவார் என்பதை என்றால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/10/09/angelo-mathews-sri-lanka-vs-england-angelo-mathews-dropped-odi-cricket/

gautam gambhir say future ms dhoni

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news