பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

0
157

பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக் காலமாக பாரிய விமர்ஷனங்கள் எழுந்துள்ளமை காரணமாக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்த அடுத்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு வாய்ப்புள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. Pujith Jayasundara Resign Sri Lanka Tamil News

அண்மைக் காலமாக பாரிய நெருக்கடிகள் எழுந்துள்ளமை காரணமாக அவர் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் தற்போதை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்யுமிடத்து, அந்த பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எஸ்.எம். விக்ரமசிங்க அல்லது சந்தன விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் நியமனம் பெறுவார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதியும் பொலிஸ் மா அதிபருக்கு இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

Tamil News Live

Tamil News Group websites