ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய அம்ருதா வழக்கு! – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

0
523
Amruta case Jayalalithaa's daughter - High Court dismissed

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரிய அம்ருதா வழக்கை, தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஜெ., மரணம் மர்மம் நிறைந்ததாக உள்ளதாக தெரிவித்தது.Amruta case Jayalalithaa’s daughter – High Court dismissed

பெங்களூரு அம்ருதா, ‘நான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு. அவரது சகோதரி சைலஜாவிடம் என்னை ஜெ., தத்து கொடுத்தார். ஜெ.மகள் என நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும்,’என மனு செய்தார்.

ஜெ.,வின் சகோதரர் ஜெயக்குமாரின் மகன் தீபக், ‘ஜெ., புகழை சீர்குலைக்க மனுதாரர் விரும்புகிறார். மரபணு சோதனைக்கு உரிமை கோர அவருக்கு உரிமை இல்லை,’என, மனு செய்தார். மாநில அரசுத் தரப்பில், ‘மனுதாரரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெ.பெங்களூருவில் மனுதாரரை சந்தித்தற்கு ஆதாரம் இல்லை. ஆர்.கே.,நகர் தொகுதியில் ஜெ. போட்டியிட்டபோது வாரிசு இல்லை என அறிவித்தார், என மனு செய்யப்பட்டது.

வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பிறப்பித்த உத்தரவு:

ஜெ.,யிடமிருந்து தத்தெடுத்து சாரதி-சைலஜா தம்பதி வளர்த்ததாக மனுதாரர் கூறுகிறார். சைலஜா முதலில் இறந்து விட்டார். அடுத்ததாக சாரதி இறக்கும்போது,’ஜெ.,விடமிருந்து உன்னை (அம்ருதாவை) தத்தெடுத்து வளர்த்தோம்,’என தெரிவித்ததாகவும், ஜெ., தன்னிடம் அன்பு செலுத்தியதாக மனுதாரர் கூறுகிறார்.

மனுதாரர் 1980 ஆக.,14 ல் பிறந்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு முன் 1980 ஜூலை 6 ல் பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் ஜெ.,பங்கேற்றுள்ளார். அந்த வீடியோவை பார்த்ததில், ஜெ.,கர்ப்பமடைந்ததற்குரிய தோற்றம் இல்லை. பெங்களூரு வீட்டில் சந்தித்ததற்கு ஆதார ஆவணங்கள் இல்லை. சென்னை அப்போலோ மருத்துவமனையில், ஜெ., ரத்த மாதிரிகளை சேகரித்து வைக்கவில்லை.

ஜெ., சகோதரரின் வாரிசுகள் தீபா, தீபக்கின் ரத்தமாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த, கட்டாயப்படுத்த முடியாது. ஜெ.,வின் தாய் சந்தியா உயில் எழுதியுள்ளார். அதில் தன் வாரிசுகள் என்பதற்கு ஜெயக்குமார், ஜெயலலிதா பற்றிய குறிப்புகள் தான் உள்ளன. சைலஜா பற்றி இல்லை.

சைலஜா, ‘நான் ஜெ.,வின் சகோதரி,’என உரிமை கோரியதை எதிர்த்து, ஜெ.,அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இதிலிருந்தே சைலஜா ஜெ.,வின் சகோதரி இல்லை என உறுதியாகிறது. தீபக், தீபா ஆகியோர் ஜெ.,வின் இரண்டாம் வகுப்புநிலை சட்டப்பூர்வ வாரிசுகள். ஜெ., இறுதிச் சடங்கில் அவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

சோபன்பாபு, ஜெயலலிதாவிற்கு தான் பிறந்நதாக மனுதாரர் கூறுகிறார். ஏன் இதை முதலில் மனுதாரர் வெளிப்படுத்தவில்லை? மனுதாரரின் இதுபோன்ற செயல் மற்றும் தீபா, தீபக் அமைதியாக இருப்பதை பார்க்கும்போது, ஜெ.,வின் சொத்துக்களை கைப்பற்றுவதற்கான நோக்கத்திற்கு மறைமுகமான செயல்பாடாக இருக்குமோ என கருதத் தோன்றுகிறது.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் ஜெ., இருந்த போது இட்லி சாப்பிட்டார் என கூறுகின்றனர். தவறான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் ஜெ.,விடம் நலம் விசாரிக்கச் சென்று காத்திருந்தவர்களை மற்றும் அப்போலோ மருத்துவமனையை வில்லன்கள் போல் சித்தரித்து விட்டனர். ஜெ., மரணம் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. ஜெ., மகள் என்பதற்கு மனுதாரர் ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :