கீழடியில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு! – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!

0
511
Gold jewelry found bottom - Tamilnadu Government Information High Court

மதுரையில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் கீழடியில் தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.Gold jewelry found bottom – Tamilnadu Government Information High Court

மதுரை அருகே உள்ள கீழடி ஊரில் தொல்லியல்துறை சார்பில் நான்காம் கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொடரவும், அருங்காட்சியகம் அமைக்கவும் உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் தொடர்ந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், 7 ஆயிரத்துக்கும் அதிகமான பழமையான பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக தங்க ஆபரணம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த பொருட்களின் காலத்தை கண்டறிவதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்தாம் கட்ட பணிகளை தொடங்குவதற்காக மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :