இரும்புத்திரை இயக்குனர் தாய் கவிதா சஸ்பெண்ட்..! – 40 நாட்கள் கழித்து நடவடிக்கை!

0
104
Ironscreen director mummy kavitha suspended - 40days action india tamil news

காஞ்சிபுரம் சோமஸ்கந்தர் சிலை முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை 40 நாட்கள் கழித்து சஸ்பெண்டு செய்துள்ளதாக அற நிலையத்துறை அறிக்கை கொடுத்துள்ளது.Ironscreen director mummy kavitha suspended – 40days action india tamil news

இரும்புத்திரை இயக்குனரின் தாய் மீதான புகார் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி :

இந்து சமய அற நிலையத்துறையின் கூடுதல் ஆணையராக பொறுப்பில் இருந்தவர் கவிதா..! இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தின் இயக்குனர் மித்ரனின் தாயார்.

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை முறைகேட்டு வழக்கில் சிக்கியதால் கூடுதல் ஆணையர் கவிதா கடந்த ஜூலை மாதம் 31ந்தேதி சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த முறைகேட்டு பணத்தில் இருந்துதான் இரும்புத்திரை படம் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து இயக்குனர் மித்ரன் ஜாமீன் மனு தாக்கல் செய்து தாயார் கவிதாவை கடந்த 7ந்தேதி ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார். தங்கள் மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார்

ஒரு அரசு அதிகாரியோ, ஊழியரோ குற்றவழக்கில் கைது செய்யப்பட்டால் 48 மணி நேரத்திற்குள்ளாக சஸ்பெண்டு செய்யப்படவேண்டும் என்ற விதி இருக்க அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் கவிதாவுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.

அவருக்கு பின்னர் ஆணையர் பொறுப்புக்கு வந்த மகராஜன் என்பவரும் கூடுதல் ஆணையர் கவிதா மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வந்தார்.

இதனை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், கவிதாவை சஸ்பெண்டு செய்யாதது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால் அவசர, அவசரமாக செய்தி குறிப்பு ஒன்றை தயார் செய்த ஆணையர் மகராஜன், கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட 31 ந்தேதி அன்றே பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஜாமீன் கிடைத்த பின்னர் கூடுதல் ஆணையர் அந்தஸ்தில் கவிதா தமிழகம் முழுவதும் பல்வேறு கோவிலுக்கு சென்று வந்து ஆவணங்களில் கையெழுத்திட்ட நிலையில், முன் தேதியிட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :