இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் ; ஐ.எம்.எப் அறிக்கை

0
526
Praising GST Bankruptcy Code IMF Predicts Indias 2018

நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என ஐ.எம்.எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Praising GST Bankruptcy Code IMF Predicts Indias 2018)

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 சதவீதமாகவும் அடுத்த 2019 ஆம் ஆண்டு 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நிதி ஆணையகம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2019 ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி அமல் போன்ற திட்டங்களால் முதலீடு அதிகரிப்பு, தனியார் நுகர்வு ஆகியவை வலுப்பட்டதன் காரணமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்துள்ளதாக ஐ.எம்.எப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி ஆணையகத்தின் கணிப்புப்படி, பொருளாதாரம் வளரும் பட்சத்தில், உலகில், வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

அத்தோடு, பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் வளர்ச்சியை விட நமது வளர்ச்சியானது நடப்பாண்டில் 0.7 சதவீதமும், 2019 ஆண்டில் 1.2 சதவீதமும் அதிகரிக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Praising GST Bankruptcy Code IMF Predicts Indias 2018