அவுஸ்ரேலியாவில் பாம்பு கடிக்கு இலக்கான பிரித்தானிய இளைஞர் பலி!

0
380
snake bite Australia killed British youth

பிரித்தானியாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மீன்பிடி ட்ரோவ்லர் படகில் சென்று கொண்டிருந்த போது கடல் பாம்பு ஒன்றால் தீண்டப்பட்டு உயிரிழந்தார். snake bite Australia killed British youth

குறித்த இளைஞர் அவுஸ்ரேலியாவின் வடக்கு பிராந்திய கடலில் குரூட் எய்லாண்ட் தீவிற்கருகில் இருந்து உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் மீன்பிடி வலையொன்றை படகிற்குள் இழுத்துள்ளார்.

இதன்போதே, வலையில் சிக்கியிருந்த கடல் பாம்பு ஒன்று தீண்டியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. அவசர உயிர்காப்பு பிரிவினர் படகிற்கு அழைக்கப்பட்ட போதும், இளைஞரின் உயிரை காக்க முடியவில்லை.

அவுஸ்ரேலியாவில் கடல் பாம்பு ஒன்றால் ஏற்பட்ட முதல் மரணம் இதுவென்று கடல்வள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் நேற்று அருகிலிருந்த பொரல்லூலா நகருக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மரண விசாரணைகள் தொடர்வதாக வட பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தாம் உதவியளித்து வருவதாகவும், அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் பிரித்தானிய உயர் ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த மரணம் சம்பவிப்பதற்கு எந்த வகையான பாம்பு காரணமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். பொதுவாக கடல் பாம்புகள் உயர் நச்சுத் தன்மையுடையதாக இருப்பதுடன் அவை மனிதர்களுடன் மிக அரிதாகவே தொடர்புபடுகின்றன. அவற்றின் கடிக்கு இலக்காகும் சந்தர்ப்பும் மிக அரிதாகவே உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்ரேலியா இவ்வாறான 30 தொடக்கம் 70 வகையான பாம்பு வகைகளுக்கு வசிப்பிடமாக இருப்பதாக அவுஸ்ரேலிய கடல்சார் அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

tags :- snake bite Australia killed British youth

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************