தமிழக துணை முதலமைச்சர் சந்தித்தது உண்மை; டிடிவி தினகரன்

0
564
TTV Dhinakaran says true OPS met

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை சந்தித்தது உண்மை என்றும் தான் செய்தது தவறு என்றும் முதலமைச்சர் பழனிசாமியை எதிர்க்க தன்னுடன் சேர்வதாக பன்னீர்செல்வம் கூறியதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளனர். (TTV Dhinakaran says true OPS met)

ஓ. பன்னீர் செல்வம் தன்னை சந்தித்தது உண்மை தான் என்றும் முதலமைச்சரை இறக்கிவிட்டு தனக்கு பதவி தருவதாக சொன்னார் என்றும் டிடிவி தினகரன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி டிடிவி தினகரனை சந்தித்து, ஆட்சியமைக்க ஆதரவு கோரியதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் அளித்த பேட்டி தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று தினகரனிடம் பன்னீர்செல்வம் கூறியதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்துள்ளனர்.

அதிமுகவுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன்னர் தூதுவிட்டதாகவும், அதனை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிடிவி தினகரன் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது,

2017 ஜூலை 12 இல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி அவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தித்தது உண்மை. தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.

என்னை சந்தித்ததை பன்னீர்செல்வம் மறுக்க மாட்டார். மறுக்க முடியாத அளவிற்கு இரகசியங்கள் உள்ளன. மேலும் கடந்த செப்டெம்பர் இறுதி வாரத்தில் தன்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார்.

பழனிசாமியை இறக்கிவிட்டு, எனக்கு பதவி தர விரும்பினார். அமைச்சர் தங்கமணியும், வேலுமணியும் என்னை துணை முதல்வர் ஆக்க முயன்றனர். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; TTV Dhinakaran says true OPS met