ஜப்பானைத் தாக்கிய டிராமி புயல்: 2 பேர் பலி

0
349
Trami storm hits Japan 2 killed

ஜப்பானைத் தாக்கிய கடும் புயல் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Trami storm hits Japan 2 killed

டிராமி (Trami) என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் டோக்கியோவில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனேப் (Tanabe) நகரில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதனால் மறுநாளும் பலத்த காற்று வீசி வரும்நிலையில் மழையும் பெய்து வருகிறது. சாலைகளிலும் ரயில் தண்டவாளங்களிலும் சாய்ந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையங்களில் பல்வேறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. புல்லட் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘டிராமி’ புயலுக்கு இதுவரை 2 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் நடந்து வருகின்றன.

tags :- Trami storm hits Japan 2 killed

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்