அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!

0
150

பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த குழுவொன்றிற்கு கொமாண்டோ பயிற்சிகளை வழங்குவதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என நாலக டி சில்வா பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். DIG Nalaka De Silva Special Force Team Inquiry Sri Lanka Tamil News

ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா ஏன் இந்த விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் அக்கறை செலுத்துகிறார் என கேள்வி எழுந்துள்ளது.

குறித்த விசேட படையணிக்கு நவீன ஆயுதங்களை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டீஐடியினரிற்கு துரித நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் விசேட ஆயுதங்களை கையாள்வதற்கான பயிற்சியை வழங்கி விசேட பிரிவொன்றை உருவாக்கவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

நாலக டி சில்வாவின் கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டார் விசேட அதிரடிப்படையினரை இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் விசேட அதிரடிப்படையின் தளபதி அவ்வாறான பயிற்சியை வழங்க மறுத்துள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites