கண்ணகி சிலையிடம் மனு கொடுத்த இந்து மக்கள் கட்சியினர்!

0
533
Hindu party people filed petition Kannaki statue india tamil news

”திருமணம் தாண்டிய உறவுகள் குற்றமாகாது’ என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை மறு ஆய்வு செய்யக் கோரி, இந்து மக்கள் கட்சியினர் பூம்புகாரில் உள்ள கண்ணகி சிலையிடம் மனு கொடுத்து பிரார்த்தனை செய்தனர்.Hindu party people filed petition Kannaki statue india tamil news

நாகை மாவட்டம், பூம்புகாரில் கடற்கரை ஓரத்தில் சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு எனத் தனி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று(30-09-2018) இங்குக் கூடிய இந்து மக்கள் கட்சியினர், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த, “திருமணம் தாண்டிய உறவுகள் குற்றமாகாது” என்ற தீர்ப்புக்கு எதிரான மனுவினை கண்ணகி சிலைமுன் வைத்தனர்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், ”சட்ட பிரிவு 497 நீக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பாரத நாட்டின் அடிப்படை கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக இது உள்ளது.

கடந்த மாதம் தன் பாலின உறவு தவறில்லை எனவும், அதற்குத் தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவையும் உச்ச நீதிமன்றம் நீக்கியது.

இது போன்ற தீர்ப்புகள் குடும்ப அமைப்பு முறையை கேள்விக்குறியாக்குகின்றன. இந்தத் தீர்ப்புகள் நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உருவாக்கவே வழி வகுக்கும். இதனால் பாரத்தின் கலாச்சாரம் சீர்கேடு அடையும்.

எனவே ‘திருமணம் தாண்டிய உறவுகள் குற்றமாகாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

திருமண உறவு, குடும்ப அமைப்பு முறைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார். இதே கோரிக்கை அடங்கிய மனுவை, இந்து மக்கள் கட்சியினர் பூம்புகார் கண்ணகி சிலையிடம் அளித்து பிரார்த்தனை செய்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :