“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

0
550
bigboss business politics duty - kamal haasan tirupur india tamil news

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics duty – kamal haasan tirupur india tamil news

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மக்களுடனான பயணமாக திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தாராபுரம் தனியார் கல்லூரியில் தொடங்கி காங்கேயம், பல்லடம், புதிய பேருந்து நிலையம் என 10 இடங்களில் அவர் உரையாற்றினார்.

காங்கேயம் கூட்டத்தில் மக்களிடம் அவர் பேசுகையில், எத்தனையோ கட்சிகள் உங்க குறைகளைக் கேட்டு விட்டு போயிருக்கிறார்கள்.

அது நிவர்த்தி செய்யப்பட்டதா என்று நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதற்கான விடையைத் தேட மக்கள் நீதி மையம் எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது.

மக்களுக்கு பிரச்சனை வந்தால் அதற்கு என்ன நிவாரணம் என்று எனக்கு உடனே தெரியாது, அதற்கான வல்லுநர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்.

கிராம சபைகளில் உங்கள் பங்கீடு பலமாக இருக்க வேண்டும், ஊர்களில் திருவிழா நடத்துவதுபோல் கிராம சபைகளை முன்சென்று வழிநடத்த வேண்டும்.

அங்கு எழுப்பப்படும் கேள்விகள் எந்தக் கோட்டையையும் அதிர வைக்கும், வரும் அக்டோபர் 2 மறக்காமல் பங்கெடுத்து கொள்ளுங்கள், கிராமம் வலுப்பட்டால் தமிழ்நாடே வலுப்படும்.

நீங்க எதுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லாம் நடத்துறீங்கனு கேட்கிறாங்க, முழு அரசியலில் இறங்கலாமே என்று பலர் கேட்கிறார்கள்.

அவரவருக்கு என்று ஒரு தொழில் வேண்டும், அரசியலை தொழிலாக்கக் கூடாது, அரசியல் தொழில் ஆனதால் தான் அதை விடாமல் வியாபாரமா செய்கிறார்கள் பலர் நமக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை ஆண்கள் பெண்கள் பாரபட்சமில்லாமல் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் மக்களை சந்திப்பது எல்லாம் பெரிய தலைவர்களைப் பார்த்து செய்வதுதான், காந்தி அந்தக் காலத்தில் பரமக்குடிக்கு 3 முறையும், சென்னைக்கு 49 முறையும் வந்திருக்கிறார்.

அப்போது ஜெட் ப்ளேன், நான்கு வழிச்சாலை எல்லாம் கிடையாது, ரயிலில் தான் பயணம் மேற்கொள்வார் அந்த வயோதிகர்.

அவரே எனக்கு முன்னுதாரணம். நாளைய பொழுது நம்முடையது, நமக்கு வாக்குறுதி கொடுக்க இனி நேரமில்லை, இது வேலையைச் செய்வதற்கான நேரம்” என்றார்.

அக்கூட்டத்தில் ஒரு குழந்தைக்கு ‘ராஜபவித்ரன்’ என்று அக்குழந்தையின் தந்தை ‘ராஜா’ ‘தாய் ‘ ‘பவித்ரா’ பெயர்களைச் சேர்த்து பெயர் வைத்தார்.

பின் மேடையருகே கைகளை ஊன்றி நடந்து வந்த மாற்றுத்திறனாளி இளைஞருடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அவர் கைகளில் படிந்த தூசியை ‘வெற்றித்திலகம்’ என்று கூறி நெற்றியில் இட்டுக் கொண்டார்.

இறுதியாக புதிய பேருந்து நிலையம் அருகே பேசுகையில் மைக் வேலை செய்யாமல் போக மக்களைப் பார்த்து கமல்ஹாசன் சைகையால் பேசியது ஆராவரத்தை ஏற்படுத்தியது.

இறுதியாக… இது மதுவுக்காகவோ, பணத்துக்காகவோ சேர்ந்த கூட்டம் அல்ல, அன்பினால் சேர்ந்தது, உங்கள் அன்புக்கு நன்றி” என்று முடித்துக்கொண்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :