டொலர் பெறுமதி உயர்வுக்கு டிரம்பே காரணம்! கலாநிதி ஹர்ஷத சில்வா!

0
279

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் இந்த டொலர் விலை உயர்வுக்கு காரணமாகும் எனவும், இந்த விலை அதிகரிப்பு பிராந்திய நாடுகளையும் பாதித்துள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி ஹர்ஷத டி சில்வா தெரிவித்தார். Dollar Value Increase Trump Reason Today Tamil News

பிராந்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பண வீக்கங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ரூபா பலவீனப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் ஏற்பட்டுள்ள ரூபாவின் வீழ்ச்சியானது 8 வீதம் மாத்திரமே ஆகும்.

நேற்று வரையில் இந்தியாவில் 13.12 வீதம் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 11.22 வீதமும், இந்தோனேஷியாவில் 9.61 வீதமும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இதனுடன் ஒப்பிடுகையில் ரூபா பலமான நிலையிலேயே உள்ளது.

டொலர் விலை வீழ்ச்சியினால் பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் போது பாதிப்பு உள்ளது போன்று, நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது நன்மையும் உண்டு என்பதை பார்க்க தவறக் கூடாது.

நேற்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!

பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Live

Tamil News Group websites