கல்முனை மாநகர சபையின் அமர்வு பெரும் வாதப்பிரதிவாதங்களுடன் இடம்பெற்றதுடன் உறுப்பினர்களின் களேபரத்தால் இடைநடுவில் சபை அமர்வை மேயர் முடிவுறுத்தினார். Kalmunai Municipal Council Assembly Today Tamil News
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர மேயர் ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று சபா மண்டபத்தில் நடைபெற்றது.
சாய்ந்த மருதுக்குத் தனி உள்ளூராட்சி மன்றம் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் அடிக்கடி மேயருடன் ஆளும் தரப்பான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறு சபை அமர்வு அமளிதுமளியுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.ஐ.அப்துல்அஸீஸ், சபையின் மாதாந்த பாதீடு (வரவு– செலவு ) அறிக்கை சபை உறுப்பினர்களுக்குத் தரப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஒன்றை மேயரிடம் முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த மேயர் றகீப் , சபை உறுப்பினர்களாலேயே தெரிவு செய்யப்பட்ட நிதிக்குழுவினருக்கு இந்த மாதாந்த பாதீடு அறிக்கை தர முடியுமெனவும் சபை உறுப்பினர்களுக்கு வழங்கமுடியாதெனவும் தெரிவித்தார். சபையில் பெரும் அமளிதுமளியும் களேபரமும் ஏற்பட்டது.
நிலமையைக் கட்டுப்படுத்த முடியாது சபை அமர்வை முடிவுறுத்துவதாக மேயர் றகீப் அறிவித்துவிட்டு அமர்விலிருந்து வெளியயேறிச் சென்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!
ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!
புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி! போக்குவரத்து பாதிப்பு!
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!