மரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

0
122
maradona winning debut 10 observations dorados de sinaloa

பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் டியேகோ மாரடோனா தலைமையில், டொராடோஸ் டி சினாலோவா அணி முதல் வெற்றியை சந்தித்துள்ளது. மெக்ஸிகோவில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்தாட்டத்தில், டொராடோஸ் அணி தனது சக 2-ஆவது டிவிஷன் அணியான கஃபேடலேரோஸை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. maradona winning debut 10 observations dorados de sinaloa,tamil sports news,football news,trending football updates

மெக்ஸிகோவின் கியூலியாகேன் நகரத்தைச் சேர்ந்த டொராடோஸ் கால்பந்து அணி தடுமாற்றத்துடன் இருந்த நிலையில், அதன் பயிற்சியாளராக பொறுப்பேற்று அனைவரையும் வியப்படையச் செய்திருந்தார் மாரடோனா. இந்நிலையில், மாரடோனா பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டொராடோஸ் வெற்றி கண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில், ஈகுவடாரைச் சேர்ந்தவரும், டொராடோஸின் முன்கள வீரருமான வினிசியோ அங்குலோ ஹாட்ரிக் கோலடித்தார். அணியின் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாரடோனா கூறியதாவது:
“இந்த ஆட்டம் அருமையானதாக இருந்தது. மாரடோனா பயனற்றவர் என்று சிலர் கூறினர். சில முட்டாள்கள் நேரப் போக்கிற்காக தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கால்பந்தாட்டம் பார்க்கிறார்கள். அவர்கள் களத்துக்கு வந்து, எனது சாதனைகளையும், நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும், எங்களால் என்ன செய்ய இயலும் என்பதையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

மேலும் இந்த வெற்றி ஒரு தொடக்கம் தான். நாங்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று மாரடோனா கூறினார். இந்த வெற்றியின் மூலமாக 3 புள்ளிகள் வென்றுள்ள டொராடோஸ் அணி, லீக் வரிசையில் 13-ஆவது இடத்தில் இருந்து 10-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

maradona winning debut 10 observations dorados de sinaloa

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news