ஓமந்தை பகுதியில் காருடன் ரயில் மோதியதில் 4 பேர் பலி

0
423
Four injured collision Kareem Omanthai area

வவுனியா, ஓமந்தை பகுதியில் சற்றுமுன்னர் (ஞாயிற்றுக்கிழமை) காருடன் ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். Four injured collision Kareem Omanthai area

ஓமந்தை, பன்றிகெய்தகுளம் குளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையூடாக கார் புகையிரதக் கடவையை கடந்த போதே இவ்விபத்து ஏற்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரமே இவ்வாறு காருடன் மோதியுள்ளது.

குறித்த 6 பேரும் புங்குடுதீவிலிருந்து ஓமந்தையிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Four injured collision Kareem Omanthai area

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites