நான்காவது தெரிவே மிகச் சிறந்தது – வட மாகாண முதலமைச்சர்

0
365
fourth best Northern Provincial Chief Minister

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வெளியிட்ட நான்கு தெரிவுகளில் நான்காவதாக குறிப்பிட்ட தெரிவே மிகச் சிறந்தது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். fourth best Northern Provincial Chief Minister

கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் அவரிடம், தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தம்மிடம் நான்கு தெரிவுகள் இருப்பதாக கூறியிருந்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமனம் வழங்காவிடின், நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது தான், நான்கு தெரிவுகளை கூறியிருந்தேன்.

முதலாவது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது.

இரண்டாவது, இன்னொரு அரசியல் கட்சியில் இணைந்து கொள்வது.

மூன்றாவது, புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது.

நான்காவது, எமது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு பாடுபாடு இல்லாத சமூக இயக்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்குவது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதையடுத்து, இதில் உங்களுக்குச் சிறந்தது எது என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, “நிச்சயமாக நான்காவது தெரிவு தான்” என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

tags :- fourth best Northern Provincial Chief Minister

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites