வீடு­கள் அமைப்­ப­தில் நீடித்த இழு­ பறி முடி­வு!

0
388
Sri Lanka Tamil News, Lanka

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் வீடு­கள் அமைப்­ப­தில் நீடித்த இழு­ பறி நேற்று முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இரு­வேறு திட்­டங்­க­ளின் ஊடாக வடக்கு, கிழக்­கில் 65 ஆயி­ரம் வீடு ­களை அமைக்­கும் பணி­கள் இரு வாரங்­க­ளில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. Indian Housing Scheme Problem Solved

25 ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் திட்­டம், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­ மை­யி­லான குழு­வால் நேர­டி­யா­கக் கையா­ளப்­ப­ட­வுள்­ளது. அதே­வேளை 40 ஆயி­ரம் வீடு­களை இந்­தி­யாவா? சீனாவா அமைப்­பது என்ற சர்ச்சை முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. வீடு­களை அமைக்­கும் பணி­களை இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­க­வும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் கொழும்­பில் நேற்று மாலை 5 மணிக்கு உயர்­மட்­டக் கூட்­டம் இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் அமைச்­சர்­க­ளான மனோ­க­ணே­சன், சுவா­மி­நா­தன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

வடக்கு, கிழக்­கில் வீட­மைப்பு பணி­களை முன்­னெ­டுப்­ப­தில் தொடர்ந்­தும் இழு­பறி நிலை நீடித்து வரு­கின்­றது. 25 ஆயி­ரம் கல் வீடு­களை அமைப்­ப­ தற்­கான ஒப்­பந்­த­கா­ரர்­க­ளைத் தெரிவு செய்த பின்­ன­ரும், எந்த அமைச்சு ஊடாக அந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பது என்­ப­தில் இழு­ப­றி­யி­ருந்­தது. இது தொடர்­பில் நேற்­றைய உயர் மட்­டக் கூட்­டத்­தில் நீண்ட நேரம் விலா­வா­ரி­யாக ஆரா­யப்­பட்­டது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­ மை­யில் ஒரு குழு அமைப்­பது என்­றும் அந்­தக் குழு இந்த வீட்­டுத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பது என்­றும் முடிவு எட்­டப்­பட்­டது. வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணி­யின் செய­லர் வே.சிவ­ஞா­ன­சோதி, இந்­தக் குழு­வின் நிறை­வேற்­றுப் பொறுப்­பா­ள­ராக இருப்­பார் என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தக் குழு­வில், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான மனோ­க­ணே­சன், சுவா­மி­நா­தன், இரு அமைச்­சுக்­க­ளி­ன­தும் செய­லர்­கள், தலைமை அமைச்­ச­ரின் ஆலோ­ச­கர் பாஸ்­க­ர­லிங்­கம், வே.சிவ­ஞா­ன­சோதி மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பிர­திதி ஒரு­வ­ரும் உள்­ள­டங்­கு­வார்­கள்.

நிதிக் கையா­ளுகை விட­யம் அமைச்­சர் மனோ­க­ணே­ச­னின் செய­லரே மேற்­கொள்­வார். அது பெய­ர­ள­வி­லா­ன­தா­கவே இருக்­கும். தலைமை அமைச்­சர் தலை­மை­யி­லான குழு­வின் முடி­வுக்கு அமை­வா­கவே வீடு­கள் அமைக்­கும் பணி வடக்கு, ,கிழக்­கில் முன்­னெக்­கப்­ப­டும்.
இந்த மாதம் மூன்­றா­வது வாரத்­தில் வீட்­டுத் திட்­டம் ஆரம்­பிப்­ப­தற்­கான அடிக்­கல் நடப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites