நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; பிரதமர்

0
687
prime minister ranil wickramasinghe comments Good governance

எதிர்காலத்தில் மேலுமொரு விசேட மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். (prime minister ranil wickramasinghe comments Good governance)

நாடாளுமன்றத்தில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர், மத்திய வங்கி பிணை முறி விவகாரம் பற்றிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விசேட மேல் நிதிமன்றத்தில் இதுவரை இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், சமகால நல்லாட்சி அரசாங்கம் எந்த விதத்திலும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனக் குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

சில நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கூடுதல் கால அவகாசம் எடுக்க நேர்ந்தாலும், சகலருக்கும் சமநீதி உறுதி செய்யப்படும் என்றும் மேல் மாகாணத்தில் விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; prime minister ranil wickramasinghe comments Good governance