குற்றச் செயல்களில் வீழ்ச்சி- பிரதமர் ரணில் பாராட்டு!

0
455

கடந்த 2017 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 35971 குற்றச் செயல்களில் 79 சதவீதமானவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இதனை விடவும் அதிகரிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். Sri lanka Crime Ratio Getting Down Prime Minister Ranil Appreciate Tamil News

152 ஆவது வருட பொலிஸ் ஞாபகர்த்த நினைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

நாட்டில் பதிவாகியுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை எந்தவித வன்முறைகளும் இன்றி முன்னெடுக்க முடிந்தமை சட்டம் ஒழுங்கு சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites