நிபா வைரஸை மையமாக வைத்து உருவாகும் புதிய படம் ’வைரஸ்’..!

0
532
Virus Tamil Movie latest news

கடந்த மே மாதத்தில் கேரளாவைத் தாக்கிய நிபா வைரஸை மையமாக வைத்து ‘வைரஸ்’ எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது.Virus Tamil Movie latest news

கடந்த மே மாதத்தில் கேரளாவில், பழந்திண்ணி வௌவால்கள் மூலமாக பரவிய ‘நிபா’ எனும் கொடிய வைரஸ் நோய் காரணமாக 20-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதைப் போல் மர்ம நோய் பரவி மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். இதனை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் மத்திய மாநில அரசுகள் திணறின. சில நாட்களில் அந்த மாநிலமே ஸ்தம்பித்தது.

இந்த நிலையில், ‘வைரஸ்’ எனப் பெரிடப்பட்ட புதிய மலையாளப் படம் ஒன்று வெளியாகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

‘மாயநதி’ படத்தை இயக்கிய ஆசிக் அபு இப்படத்தை இயக்குகிறார். ரேவதி, டொவிணோ தாமஸ், பார்வதி, ரீமா கல்லிங்கல், காளிதாஸ் ஜெயராம், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

சுசின் ஷியாம் இசையில் ராஜீவ் ரவி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

தென்னிந்தியாவை அச்சத்தில் ஆழ்த்திய நிபா வைரஸை மையமாக வைத்து ‘வைரஸ்’ படம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிபா வைரஸால் ஏற்பட்ட கொடிய பாதிப்புகளையும், அந்த வைரஸ் குறித்து பல்வேறு உண்மைகளையும் இப்படம் எடுத்துக் கூறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நிபா வைரஸ் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை கொண்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சர்கார் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் : பெங்களூர் விரைந்த ரஜினி..!

விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!

பரியேறும் பெருமாள் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!

சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Virus Tamil Movie latest news