ஓமந்தையில் கனரக ஆயுதங்களின் வெடிபொருட்கள் மீட்பு!

0
325

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Vavuniya Omanthai Police Captured Explosive Items Private Land Tamil News

ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை உரிமையாளர் துப்புரவு செய்து கொண்டிருக்கும்போது காணியில் மிதிவெடிகள், மோட்டார் குண்டு, ஆர்.பி.ஜி ரக குண்டுகள் போன்ற வெடி பொருட்கள் இருந்துள்ளதை கண்டுள்ளார்.

இதையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கமைவாக அப் பகுதிக்கு விஜயம் செய்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு அப்பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்து, நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குண்டுகளை மீட்டுள்ளதுடன் மேலும் குண்டுகளை மீட்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை